காணி தொடர்பாக விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபர் ஒருவர் கிராமத்தின் தலைவரால் தாக்கபட்டுள்ளார். புத்தூர் மேற்குப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த பொன்னன் கிருபாகரன் என்ற வயோதிபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். முதுகு, வயிறு மற்றும் பின் பகுதிகளில் அவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.

 தனக்கெற்றப்பட்ட விபாPதத்தை தெரிவிக்கையில் காணிப்பிரச்சனை தொடர்பாக தான் தனது சகோதரணைப் பேசியதாகவும் அப்போது சம்பவ அடத்திற்கு வந்த எமது கிராமத்தின் சனசமூக நிலையத்தினா; உங்களை விசாரிக்க வேண்டும் தங்களோடு வருமாறு என்னை வீதியில் நிர்மாணமாக மக்கள் பார்க்கும் படியாக இழுத்துச் சென்று வாசியசாலைக்குள் வைத்து வாசியசாலையில் தலைவர் எனது செஞ்சில் காலால் மிதித்தும் பொல்லு தடிகளால் அடித்தும் என்னை தாக்கினார்.

பின்னர் என்னை மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏற்றி என்னை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். வலிதாங்க முடியாமல் எனக்கு மயக்கம் ஏற்றட்டது பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இது தொடர்பாக யாழ்ப்பாணம் போலீசிடம் முறைப்பாடு செய்யப்பட்டபோது அவர்கள் அதனை ஏற்கவில்லை அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவித்தனர். அச்சுவேலி போலீசார் கிராமத்தலைவருக்கு சாதகமாக செயற்படுவதால் தங்கள் யாழ்ப்பாணம் பொலிஸாhpடம் முறைப்பாடு செய்ய வந்ததாகவும் தெரிவித்தோம் உடனே அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்திற்கு தொடா;பு கொண்டு எங்கள் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர தெரிவித்தற்கு இணங்க எமது முறைப்பாட்டை அச்சுவேலிப் பொலிஸர் பதிவு செய்துள்ளனர். அந்தச் சம்பவம் தொடர்பாக நாளைய தினம் விசாரணை நடைபெறவுள்ளது அச்சுவேலி பொலிசார் பாரபட்டசமான முறையில் விசாரணயின் போது செயற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நிண்ட காலமாக இவ்வாறான சம்பவங்கள் குறித்த கிராமத்தில் நடைபெறுவதாகவும் கிராமத்தில் உள்ள பிரச்சணைகள் வெளியில் வராத வண்ணம் கிராமத்தின் தலைவரே தண்டணைகள் வழங்கி வருவதாக மக்கள் தெரிவித்தனர். மேற்குறிப்பட்ட பொன்னன் கிருபாகரன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு முதல் நாள் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞ்சர் ஒருவர்  தாக்கப்பட்டு அச்சுவேலி மருத்தவமனையில் சகிச்சை பெற்றுள்ளார். மேற்படி கிராமத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடா;ச்சியாக நடைபெற்று வருவதாகவும் சட்டத்தை தாங்கள் கையில் எடுத்த கட்டப்பஞ்சாயத்து முறைமூலம் மக்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி வருவதாக மக்கள் தெரிவித்தனர்.



Leave a Reply.

    Kalaikkathir

    The Intelligence Files


UA-27862077-1