தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றிணைந்து முன்மொழிந்த ஆரோக்கியமான முடிவுகளை தனது வழமையான பாணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இழுத்தடித்துக் குழப்பியிருக்கின்றார்.இது குறித்து மேலும் தெரிவருவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநதிகளுமான இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் சந்தித்து உரையாடினர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒருபொறிமுறையை உருவாக்குதல், அதனைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தல் போன்ற பலவிடயங்கள் கலந்துரையடப்பட்டன. முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு அதியுயர்சபை உருவாக்கப்பட வேண்டுமெனவும் மாவட்ட குழுக்களும், ஏனைய பிரதேச கிராமிய குழுக்களும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மேற்கண்ட கருத்துக்கள் யாவும் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த பல கட்சிகள் விரும்பம் தெரிவித்திருந்தன. இருப்பினும் இந்த விடயங்கள் குறித்து தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவுடன் முடிவெடுத்த பின்னரே நடைமுறைப்படுத்த முடியும் என்றும் அதற்கான அவகாசம் வழங்கப்படவேண்டும் என்றும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் ஒரு வாரத்தில் மீண்டும் இந்தக் குழுக் கூட்டம் கூடும் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தனது வழமையான பாணியில் இந்த முடிவுகள் தமிழரசுக்கட்சியால் குழப்பப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேபோன்ற கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. குறித்த கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வந்துவிட்டார் என்று தெரிவித்து சம்பந்தன் கூட்டத்திற்கு செல்லாமலேயே கூட்டத்திற்கு சென்றிருந்த ஏனையவர்கள் திரும்பிச் சென்ற சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply.

    Kalaikkathir

    Thank you saritham.com


UA-27862077-1